போபால், அக்.16: நடிகை ஹேமாமாலினியின் கன்னத்தை போல சாலைகள் பளபளப்புடன் சீரமைக்கப்படும் என்று மத்தியப்பிரதேச காங்கிரஸ் அமைச்சர் கூறியுள்ளார்.

ம.பி. மாநிலத்தின் மூத்த அமைச்சர் பிசி சர்மா, பொதுப்பணி மேம்பாட்டு அமைச்சர் சஜ்ஜன் வர்மாவுடன், போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில் உள்ள சாலைகளின் நிலையை ஆய்வு செய்த பின்னர் கூறுகையில், மத்திய பிரதேசத்தில் சாலைகள் பலத்த மழைக்குப் பிறகு, எல்லா இடங்களிலும் குழிகளாக மாறி உள்ளன.

தற்போது, சாலைகளின் நிலை பெரியம்மை தழும்புகள் போன்று உள்ளது, சுருக்கமாக சொன்னால் சாலைகளின் நிலை பிஜேபி பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் கன்னங்களைப் போல மாறிவிட்டதாகத் தெரிகிறது என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த சாலைகள் 15 நாட்களுக்குள் சரிசெய்யப்பட்டு அவை ஹேமாமாலினியின் கன்னங்கள் போன்று பளபளப்பாக உருமாற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.