மும்பை, அக்.16:  ஒவ்வொரு வருடமும் சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 2-ல் தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் அதிரடி வீரர்கள் ஷேவாக், பிரையன் லாரா, முரளிதரன், பிரெட் லீ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் என்னும் இந்தப் தொடரை, புரொபஷனல் மேனேஜ்மெண்ட் குழுமமும் மஹாராஷ்டிரா சாலைப் பாதுகாப்புப் பிரிவும் இணைந்து நடத்துகின்றன. இதற்கு, பிசிசிஐயும் அனுமதி அளித்துள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் ஆட்டத்தை திரும்ப காண அவரது வெறியர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், தற்போதிலிருந்தே ‘வெல்கம் பேக் சச்சின்’ உள்ளிட்ட பல்வேறு ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.