ரியாத், அக்.17: சவுதி அரேபியாவில் கனரக வாகனம் மீது பஸ் மோதி தீப்பிடித்த விபத்தில் 35 பேர் பலியாகினர்.

மதினா மாகாணத்தில் உள்ள ஹஸ்ரா சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்சில் புனித யாத்திரைக்காக 39 பேர் பயணித்தனர். அப்போது எதிரே வந்த கனரக வாகனம் மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.

இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினரு பயணிகளை மீட்கப் போராடினர். ஆனால் பஸ் முழுவதும் தீ பரவியதால் 35 பயணிகள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் அல் ஹம்னா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பஸ்சில் ஆசிய, அரேபியாவைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்ததாக தெரிகிறது.