புதுடெல்லி, அக்.17: டெல்லியில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைதொடர்ந்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு வாகன கட்டுப்பாடுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப் உள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் மாலை நேரத்தில் கூட சி.என்.ஜி வாகனங்களுக்கு அனுமதி கிடைக்காது என்று கூறினார்.

மேலும் விதிகளை மீறுபவர்கள் ரூ.4 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

காரில் பள்ளி குழந்தைகள் இருந்தால் மட்டும் இதற்கு விலக்கு அளிக்கப்படும். மாநிலத்தின் வெளியில் இருந்து டெல்லிக்கு வரும் வாகனங்களுக்கும் இந்த விலக்கு கிடையாது. மகளிர் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு இத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறுஅவர் கூறினார்.