செங்குன்றம், அக்.17: திருவள்ளுர் மாவட்ட சி.ஐ.டி.யு, ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரெட்ஹில்ஸ் பஸ் நிலையம் எதிரில் நடந்தது. சங்க தலைவர் ஜி.சேகர் என்கிற மீசை சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட சங்க செயலாளர் எம்.சந்திரசேகரன் ஒன்றிய செயலாளர் எஸ்.வேலு, முன்னிலை வகித்தனர். விஜய் அசோசியேட்ஸ் பில்டர்ஸ் அதிபர் ஜி.எம்.அம்மையப்பன் வாழத்துரை வழங்கினார். சென்னை மாநகர் காவல் கூடுதல் ஆணையர் எம்.ராதா கிருஷ்ணன் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை, சுற்றுவட்டார அரசு பள்ளியில் நல்லாசிரியர்களுக்கு பதக்கம், நினைவுபரிசு வழங்கினார்.