சென்னை, அக்.17: சசிகலா சிறையில் இருந்து வெளி வநத்£லும் அவரையும். அவரது குடும்பத்தினரையும் அதிமுகவில் ஒரு போதும் சேர்க்க மாட்டோம் என்றும் ஒவ்வொரு சோதனையிலும் அதிமுக வீறு கொண்ட எழும் என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார் சென்னையில் அதிமுக 48-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், 47 ஆண்டுகளை மக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக கடந்து 48 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 1972 திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்க உருவாக்கப்பட்டது தான் அதிமுக. இரத்தத்தால் உருவான இயக்கம் தான் அதிமுக. 1972 துவங்கி 10 ஆண்டு காலம் ஆட்சி செய்தார் எம்ஜிஆர். இன்றும் மக்கள் மனதில் உள்ளார் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு பிறகு அதிமுக அழிந்து விடும் என எண்ணி நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி செய்தார். ஒவ்வொரு சோதனையின் போது தான் அதிமுக வீறு கொண்டு எழும் எனவும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே வெளியில் வருவது சட்டரீதியான விவகாரம் எனவும் அதில் நாங்கள் தலையிட இயலாது எனவும் தெரிவித்தார். மேலும், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை ஒருபோதும் ஏற்பதில்லை என்ற கட்சியின் நிலைபாட்டில் இருந்து யாரும் மாறப்போவது இல்லை எனக்கூறிய அவர், சசிகலா இனி வரும் காலங்களிலும் கட்சியில் இணைவது என்பது சாத்தியமில்லை என தெரிவித்தார். மேலும், தி.மு.க விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யக்கூடிய ஒரு கட்சி எனவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கியது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதுமட்டுமல்லாமல் ஸ்டாலின் எந்த சவாலை விடுத்தாலும் அதை ஏற்க அ.தி.மு.க தயாராகவுள்ளது எனவும் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் அதனையும் சந்திக்க கட்சி தயாறாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக விமர்சனங்கள் எழுவதில் அர்த்தமில்லை எனவும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியதற்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.