சென்னை, அக்.17: கண்ணகி நகரை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 59). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு மறுநாள் திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்க நகை, ரூ.10 ஆயிரம் பணம் திருடுப்போயுள்ளது. இது குறித்த புகாரின்பேரில், கண்ணகிநகர் போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 21), சூர்யா (வயது 19) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சவரன் நகை, வெள்ளி கொலுசுகள், எல்.இ.டி. டிவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.