சென்னை, அக்.17: சின்மயா நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 19). இவரது நண்பர் ஐயப்பா நகரை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 30). ஆனந்த ராஜ், விஜய்யிடம் பைக்கை கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், விஜய்யின் பைக்கை எடுப்பதற்கு பதில், தவறுதலாக பக்கத்து வீட்டுக்காரர் அசோக் குமார் என்பவரின் பைக்கை எடுத்துக்கொண்டு ஆனந்த ராஜ் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், பதறிப்போன அசோக், நேற்றிரவு ஆனந்தராஜ் பைக்கை திரும்ப பார்க் செய்வதற்காக வந்தபோது, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அசோக்குமார், ஆனந்தராஜை தாக்கியதாக தெரிகிறது. தடுக்க வந்த விஜய்க்கும் அடி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.