மெட்ரோ குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்ந்தது

சென்னை

சென்னை,அக்.18: சென்னை குடிநீர் வாரியம் கட்டணம் மூலம் வழங்கப்படும் லாரி குடிநீர் விலையை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்திடம் தண்ணீர் லாரிக்காக முன்பதிவு செய்யும் மக்கள் நீண்ட நாள் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. சென்னை குடிநீர் வாரியம் தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும் பிரச்சனை தீரவில்லை. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வாக சென்னை குடிநீர் வாரியம் புதிய திட்டம் ஒன்றை கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்த்தது.

அதன்படி “சென்னை குடிநீர் வாரியத்திடம் தண்ணீர் லாரிக்கு முன்பதிவு செய்துவிட்டு இனி நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ‘டயல் ஃபார் வாட்டர் 2.0’ என்ற சேவையின் மூலம் லாரி பதிவு செய்த நாளில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏதாவது ஒருநாளில் குடிநீர் பெறும் வகையில் தேர்வு சென்னை மக்கள் இச்சேவையை இணைய வழியிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இணைய வழியில் முன்பதிவு செய்பவர்கள் தங்கள் வங்கி அட்டையின் மூலமாகவோ அல்லது கடன் அட்டைகளின் மூலமாகவோ கட்டணம் செலுத்தலாம். தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்பவர்கள், 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் லாரியை மட்டுமே பணமாகச் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்ய முடியும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 9000, 12000 மற்றும் 16000 லிட்டர்களும், தனி வீடுகளில் வசிப்பவர்கள் 3000, 6000 மற்றும் 9000 லிட்டர்களும் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில் 6000 லிட்டர் குடிநீர் ரூ.435-க்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.499 என விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. 9000 லிட்டர் குடிநீர் ரூ. 700 யிலிருந்து 735 என 35 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வணிகரீதியாக வழங்கப்படும் லாரி குடிநீரின் விலையையும் சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தி உள்ளது. அதன்படி 3000 லிட்டர் ரூ.500 என்றும், 6000 லிட்டர் ரூ.735 என்றும், 9000 லிட்டர் ரூ.1050 எனவும், 12000 லிட்டர் ரூ.1400 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.