வெற்றி மாறனுடன் இணைந்த எல்ரெட் குமார்

சினிமா

சமீபத்தில் வெளியாகி வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற ‘அசுரன்’ படத்தை இயக்கிய வெற்றி மாறன், பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமாருடன் இயக்கவிருக்கிறார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை வெற்றி மாறன் இயக்க உள்ளார். இது குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறியதாவது:-.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து மற்றுமொரு மிகச் சிறந்த படத்தைத் தருவதற்கு மகிழ்வுடன் தயாராகிக்கொண்டிருக்கிறேன். வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக்கலைஞர்கள் விவரங்களை அறிவிக்கிறோம் என்றார்.