சென்னை, அக்.19: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வரும் 31-ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கண்கானிப்பு பொறியாளர் அன்பரசன், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது மாநிலங்களில் உள்ள அணை பராமரிப்பு, அதற்கான நடைமுறைகள், அணை பாதுகாப்பு ஆகியவை குறித்த அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகம் உட்பட அந்தந்த மாநில பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்கள் மாநிலத்தின் தரப்பு புள்ளி விவரங்கள் மற்றும் கோரிக்கைகளை அறிக்கையாக குழு முன்னிலையில் தாக்கல் செய்தனர். இதையடுத்து அடுத்த கூட்டம் திருச்சியில் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளதாக ஒழுங்காற்று தலைவர் நவீன் குமார் தெரிவித்தார்.