லண்டன், அக்.19: பிரிட்டிஷ் தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனமான ‘தி ராயல் மிண்ட்’ முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன உலகின் முதல் ஏடிஎம் அட்டையை உருவாக்கியுள்ளது. இதில் 18 காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை 18750 யூரோ (சுமார் 14 லட்சம் 70 ஆயிரம் ரூபாய்). மேலும் இதற்கு ‘ராரிஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த டெபிட் கார்டில் வாடிக்கையாளரின் பெயர் எழுதப்பட்டு கையொப்பமிடப்படும் என்றும்,. அட்டையின் எந்தவொரு பரிவர்த்தனைக் கட்டணமும் ஏற்படாது என்பது இதன் சிறப்பு. மேலும், அந்நிய செலாவணி கட்டணம் எதுவும் செலுத்த அவசியம் இல்லை எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இது ஆடம்பர கட்டண அட்டைகளின் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.