திருத்தணி அக் 19: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுவதையொட்டி இன்று பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைதொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ் செல்வனை ஆதரித்து திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கொங்கராம்பூண்டி பகுதியில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வீடு, வீடாக சென்று அ.தி.மு.க அரசின் சாதனை களையும், திட்டங்களையும் விளக்கி சொல்லி துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலைக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மாவட்ட செயலாளரும் பொன்னேரி எம்எல்ஏவுமான சிறுணியம் பி.பலராமன், கும்மிடிபூண்டி எம்எல்ஏ விஜயகுமார், ஆவின் சேர்மேன் வேலஞ்சேரி த.சந்திரன், பொதட்டூர்பேட்டை நகர செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன், மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.