பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியான நிதி அகர்வால்

சினிமா

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது ஜெயம் ரவி ‘பூமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25-வது படமான இந்த படத்தை லட்சுமண் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நிதி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அடங்கமறு படத்தை தயாரித்த சுஜாத்தா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், படத்தின் ஒரு பாடலை பிரபல ராப் பாடகர் யோகி பி பாடவிருப்பதாக இமான் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவெ ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பொல்லாதவன், கஜினி, எந்திரன், குருவி, ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி 2, விவேகம், காலா உள்பட பல தமிழ்ப்படங்களில் ராப் பகுதி பாடலை பாடியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.