சென்னை, அக்.21: கோவை கேபிஆர் குழுமத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள நூற்பாலைகள் மற்றும் கார்மெண்ட்ஸ்களில் 25000 பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில் 3500 பேர் பணிபுரிந்து கொண்டே கல்வி கற்கிறார்கள். 2018-2019 – ம் கல்வி ஆண்டின் 329 பெண்கள் பட்டம் பெறுகின்றனர். பட்டமளிப்பு விழா 18.10.2019 அன்று சென்னை பல்கலைகழகத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கே.பி.ஆர். குழுமத்ததை சேர்ந்த பெண் தொழிலாளிகள் 329 பேர் பட்டம் பெற்றனர். இதில் 15 பேர் பல்கலைக்கழக அளவில் தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.

இதில் இ.பிரியா என்ற பெண்மணி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இருந்து விருதை பெற்றார். மேலும் பிசிஏ, பிபிஏ,பிகாம் ஆகிய ஐந்து துறைகளிலும் முதல் மூன்று இடங்களையும் கே.பி.ஆர் நிறுவனத்தை சேர்ந்த பெண்களே பெற்றனர். இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழக துணை வேந்தர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த தகவலை கே.பி.ஆர் குழுமத்தின் துணை தலைவர் சோமசுந்தரம் தெரிவித்தார்.