நடிகர் கிருஷ்ணா தயாரிக்கும் படத்தில் நடிகை அமலா

சினிமா

இயக்குனர் விஷ்ணு வரதனின் தம்பியும், நடிகருமான கிருஷ்ணா தற்போது கழுகு-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் ரிலீசுக்கு தயாராரிக்கொண்டு இருக்கும் நிலையில், புதிய படத்தை அவர் தயாரிக்கிறார். இதில் நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிகை அமலா நடிக்கிறார்.

ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கிருஷ்ணா தயாரிக்க, புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரிஸ் வரும் 25 முதல் ஜீஸ் 5 வலைத்தளத்தில் ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.