நாக்பூர், அக்.21: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. வாக்கு சாவடிகளில் காலையிலேயே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.