சென்னை, அக்.22: மதுரவாயல் அருகே முட்புதரில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் சென்று பார்த்ததில், பள்ளி மாணவனிடம் தவறாக நடந்துக்கொண்டிருந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குன்றத்தூரை சேர்ந்த நித்திராஜ் (வயது 42) என்ற நபரை கைது செய்து நடத்திய விசாரணையில் மதுரவாயலில் ஷேர் ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த நித்திராஜ், தன்னுடன் பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவனிடம் நயவஞ்சகமாக பேசி, அங்கிருந்த முட்புதருக்கு அழைத்துச் சென்று, அவனிடம் தவறாக நடந்துள்ளது, தெரியவந்தது. இதனையடுத்து, நித்திராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.