சென்னை, அக்.22: 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில், அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பூரண மதுவிலக்கில் அரசு உறுதியாக இருக்கிறது. ஒரே நாளில் மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். எனவே படிப்படியாக டாஸ்மாக்கடைகள் மூடப்படும். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். திமுகவின் எந்த முயற்சிகளும் எடுபடாது.

7 பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையில், அதுகுறித்த விவதாங்கள் தேவையில்லை என்றார்.மத்திய அரசின் மும்மொழி வரைவு தொடர்பான தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில், தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் என்றும், இந்தியை திணிக்க கூடாது என்றும் தெரிவித்தார். கூட்டாட்சி தத்துவத்தில் மொழி திணிப்பு இருக்க கூடாது என, பிரதமரிடம் ஏற்கனவே தெளிவு படுத்தியிருப்பதாகவும் கூறினார்.