சங்கத்தமிழன், கடைசி விவசாயி படங்கள் பற்றி ராஷி கண்ணா

சினிமா

தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா, தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்தது. ஆனால் தியேட்டர்கள் அதிக அளவில் கிடைக்காததால் பட வெளியீடு நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனது கேரக்டர் நிச்சயம் பேசப்படும் என்று ராஷி கண்ணா கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து கடைசி விவசாயி படத்தில் ராஷி கண்ணா நடித்து வருகிறார். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் நடிப்பதும் மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிராந்தி மாதேவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் வெங்கிமாமா என்ற தெலுங்கிப்படத்தில் வெங்கடேஷ், நாகசைதன்யா ஆகியோருடன் நடித்து வருகிறார். மிருதி இயக்கத்தில் சாய் தரம்தெஜ் உடன் ஒருபடமும் தெலுங்கில் அவரது கைவசம் உள்ளது.