சென்னையில் லெஹ்ரி வால்வுகள் மையம் திறப்பு

சென்னை

சென்னை அக்.22: லெஹ்ரி வால்வுகள் சென்னையில் ஸ்பென்சர் மாலில் நேரடி அனுபவ மையத்தை துவக்கியிருப்பதை அறிவித்துள்ளது. அனுபவம், நிபுணத்துவம் மற்றும் புதுமையான தயாரிப்புகளுக்கான உள்கட்டமைப்பு துறையில் நன்கு அறியப்பட்ட ஒரு குடும்பம் நடத்தும் உற்பத்தி நிறுவனமான லெஹ்ரி வால்வ்ஸ், தங்கள் நேரடியாக கலந்துரையாடும், அனுபவ மையத்தை – ‘லைவ் ஸ்டுடியோ’ (லெஹ்ரி இன்டராக்டிவ் வால்வு எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ) அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த துறையில் இந்நிறுவனம் 69 வது ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்த புதிய ஸ்டுடியோ திறக்கப்பட்டுள்ளது.

இன்றைய உள்கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் மற்றும் நீர் நுகர்வுக்கான வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தங்களது அனுபவ மையம் திகழும் என்று லெஹ்ரி வால்வுகள் நிறுவனம கூறியுள்ளது. முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் நுகர்வு அதிகரித்துள்ளது. இதற்காக திறந்த தொழில்நுட்பத்தில் தண்ணீர் விநியோகமுறை தேவைப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் பரப்புவதே இதுபோன்ற ஸ்டூடியோக்கள் திறக்கப்படுவதன் முக்கிய நோக்கம்.
நீர் விநியோகம், நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை குறித்த தங்களது தொழில்நுடபங்கள், செயல் விளக்கங்கள் மற்றும் எங்களது சாதனங்களை பயன்படுத்துவதால் 20 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரை தண்ணீரை சேமிக்கமுடியும் என்று லெஹ்ரி வால்வுகள் கூறுகின்றன.