சென்னை, அக்.24: திருச்சியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25). டிப்ளமோ படித்துள்ளார். இவரிடம், வளசரவாக்கத்தை சேர்ந்த பாலாஜி (வயது 45), ஆவடியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 48) ஆகிய 2 பேர் சமீபத்தில் அறிமுகமாகி உள்ளனர், ரெயில்வே தொழிற்சங்கம் ஒன்றின் நிர்வாகியாக உள்ளதால், ரூ. 5.15 லட்சம் பணத்தை தந்தால், உனக்கும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருகிறோம் என்று கூறி கோபியிடமிருந்து பணத்தை பெற்று கொண்டு ராஜ்குமார் மற்றும் பாலாஜி தப்பிவிட்டனர். இது குறித்து, பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி ராஜ்குமார், பாலாஜியை கைது செய்தனர்.