தொகுதி வளர்ச்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்

தமிழ்நாடு

புதுச்சேரி, அக். 24: காமராஜர் நகர் இடைத்தேர்தலில் தொகுதி வளர்ச்சிக்காக மக்கள் வாக் களித்துள்ளனர் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமி கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- காமராஜர் நகர் தொகுதி மக்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளார்கள். காமராஜர் நகர் தொகுதி வளர்ச்சி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்கனவே இருந்த வைத்திலிங்கம் நிறைய வளர்ச்சி பணிகளை செய்துள்ளார்.

புதுவை மக்கள் எப்போதுமே காங்கிரஸ் பக்கம் இருப்பார்கள் என்பதன் சான்றாக இந்த வெற்றி இருக்கிறது.புதுவை அரசுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவரால் இந்த மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடும் முக்கிய காரணமாகும். இவ்வாறு நாராயணசாமி கூறினார். மிகப்பெரிய வெற்றி வெற்றி பாடுபட்டு தேடிக் கொடுத்த திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார்.