சென்னை, அக்.24: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவின் மிகப்பெரிய வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளா. வரும் தேர்தலில் இந்த கூட்டணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக பெற்றுள்ள இந்த வெற்றி சாதாரணமானது அல்ல. ஒட்டுமொத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தேர்தல் பணியை துணை முதலமைச்சர். அமைச்சர் பெருமக்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மிக சிறப்பாக ஆற்றினார்கள். குறிப்பாக பாமக, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி, புரட்சிபாரதம் கட்சி உள்ளிட்ட இன்னும் பல கூட்டணி கட்சிகளின், தொண்டர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள்.

திட்டமிட்டு பிரச்சாரத்தை செய்தோம், நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் பெருவாரியாக திரண்டு எங்களுக்கு வாக்களித்தார்கள். கூட்டணி கட்சிகளுக்கு எனது மனமார்ந்த, உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது மட்டுமின்றி ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீர்நிலைகள் பராமரிப்பு, குடிமராமத்து பணிகள் போன்றவை செய்ததால் மக்கள் நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அதிமுக எப்போதும் கூட்டணிக்கு மதிப்பளிக்க கூடிய கட்சி. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என்ற கேள்விக்கு, பஞ்சமி நிலம் குறித்த உண்மைத் தன்மை ஆராயப்படும். இவ்வாறு அவர் கூறினார்.