சேலம், அக்.25: அமமுகவில் தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட புகழேந்தி இன்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இடைத்தேர்தல் வெற்றிக்காக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதிமுகவில் இன்னும் சேரவில்லை என்றும் அவர் கூறினார். தினகரன் நம்பிக்கை துரோகி என்றும் கட்சியை நடத்தத் தெரியாதவர் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் கர்நாடக மாநில அமைப்பாளராக இருந்தவர் புகழேந்தி. அண்மை காலமாக டிடிவி. தினகரனின் நடவடிக்கைகளை இவர¢ குறை கூறி வந்தார். மக்களவை தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததற்கும் தினகரனின் செயல்பாடே காரணம் என குற்றம் சாட்டினார். இதையடுத்து கர்நாடக மாநில அமைப்பாளர் பொறுப்பில் இருந்து இவரை தினகரன் நீக்கினார்.

இந்நிலையில் புகழேந்தி இன்று காலை சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு முதலமைச்சருக்கு வாழ்த்து கூறுவதற்காகவே இங்கு வந்தேன். அதிமுகவில் நான் இன்னும் சேரவில்லை. அப்படி சேர்வதாக இருந்தால் உங்களிடம் தெரிவிப்பேன். எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் தொடர் வெற்றிகளை குவித்து வந்த அதிமுகவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லமுறையில் நடத்தி வருகிறார். கட்சியின் வெற்றியை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

டிடிவி. தினகரனை நம்பி அவருடன் இருந்தேன். ஆனால் அவர் ஏமாற்றி விட்டார். அவரிடம் அனைத்தையும் இழந்த விட்டேன்., தன்மானத்தை மட்டும் இழக்க மாட்டான். தினகரனுக்கு கட்சியை நடத்தவே தெரியாது. விஸ்வாசம் என்றால் என்ன என்றே தெரியாதவர்.
அமமுக என்னுடைய கட்சி தான். அங்கு போகப்போக என்ன நடக்க போகிறது என்பதை வேடிக்கை பாருங்கள். சசிகலா அவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தார். ஆனால் இவர் எல்லாவற்றையும் கெடுத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து எடப்பாடியுடன¢என்ன பேசினீர்கள் என்று கேட்டதற்கு, நானும் அவரும் 35 ஆண்டு கால நண்பர்கள். ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் செல்வோம். அந்த நட்பு அடிப்படையில் இன்று அவரை சந்தித்தேன். அவரும் என்னிடம் நலம் விசாரித்தார்.