அதிமுக வெற்றி: நிர்வாகிகள் கொண்டாட்டம்

சென்னை

சென்னை, அக்.25: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன, இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அமோக வெற்றி பெற்றனர். இதனையடுத்து நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்து நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தி.நகர் பி.சத்யா எம்எல்ஏ தலைமையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட அவைத்தலைவர் நுங்கை மாறன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் நுங்கை செல்வக்குமார், வட்ட செயலாளர்கள் கேபிள் டிவி மாரி, பி.ராஜேஷ், இளையமாறன், சந்துரு, பந்தல்பாபு, வழக்கறிஞர் சதாசிவம், நிர்வாகிகள் ஜெயபால், நுங்கை மூர்த்தி, எல். சங்கர், நுங்கை மனோகர், விஜயகோபால், பொன் செ குமார், மன்சூர் அகமது, சேதுராஜன், அன்சர், மாங்கா நாகராஜ், விஜய் கார்மேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தென் சென்னை வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சண்முகராஜா, வேளச்சேரி பகுதி செயலாளர் மூர்த்தி ஆகியோரும் வரவேற்பு அளித்தனர்.