பொகோடா, அக்.28: கொலம்பியா நாட்டில் ஒரு பெண் தொடர்ந்து இரு மாதங்களாக தூங்கி வரும் செய்தி வைரலாகியுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஷாரிக் தோஹார். இவருக்கு கிளெயின் லெவின் என்ற விநோத நோய் வந்துள்ளது. இந்த நோய் உள்ளவர்கள் தூங்க ஆரம்பித்தால் பல நாட்கள் தூக்கத்திலேயே இருப்பார்கள். அவர்கள் முழித்து வேலை செய்ய துவங்கினால் சில மணி நேரங்களிலேயே சோர்வாகி மீண்டும் தூங்கச் சென்று விடுவார்கள்.

உலகிலேயே இந்த வியாதி 40 பேருக்குத் தான் உள்ளதாகவும் அதில் ஷாரிக் தோஹரும் ஒருவர். கடும் தூக்கத்தில் இருக்கும் இவர்களுக்குப் பசி, தாகம் என எதுவுமே தெரியாது ஆனால் சரியான நேரத்திற்குச் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் அவர்கள் தூங்கும் நேரத்தில் உணவைத் திரவப்பொருளாக மாற்றி அவர்கள் உடலுக்குள் செலுத்துவார்கள். இந்த வியாதி உள்ளவர்களுக்கு அந்தந்த நாட்டுச் சுகாதாரத்துறை தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.