எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நாள்: அதிபர் டிரம்ப்

உலகம்

வாஷிங்டன், அக்.28: உலகின் பயங்கரவாத அமைப்பின் மிகப்பெரிய தலைவனாக இருந்த அல் பாக்தாதி சுட்டுக்கொல்லப்பட்டது தீவிரவாத ஒழிப்பில் முக்கிய கட்டம் என்றும், இந்த நாள் அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நாள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அல் பாக்தாதி சுட்டுக் கொல்லப்பட்டதை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அல்-கொய்தா தீவிரவாத தலைவன் ஒசாமா பின்லேடனை 2011-ல் சுட்டுகொன்ற பிறகு தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை இது.
உலகின் நம்பர் ஒன் தீவிரவாதியான அபுபக்கர் அல்பஹாதியை நாங்கள்உயிரிழக்க செய்திருக்கிறோம். அவர் ஒரு நாயை போல் உயிரிழந்திருக்கிறான். அமெரிக்க அதிரடிப்படையினரின் தாக்குதலில் இருந்து தப்புதவற்காக குண்டுகளை வெடிக்க செய்திருக்கிறான். அவனது மரணம் அமெரிக்காவுக்கு ஒரு சிறப்பான நாள் என்றார்.

பின்லேடன் மறைவுக்கு பிறகு தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்க எடுத்த மிகப்பெரிய நடவடிக்கை இது என்றார். இதே போல் அமெரிக்காவின் பிற தலைவர்களும், கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கிலாந்தின் பிரதமர் ஜான் மோரிஸ் உள்ளிட்ட தலைவர்களும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பாராட்டியிருக்கிறார்கள். சிம்ம சொப்பனமாக விளங்கிய பாக்தாதி கொல்லப்பட்டது தீவிரவாத இயக்கத்துக்கு விழுந்த மரண அடி என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.