சென்னை, அக்.29: அலங்காநல்லூரில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் மதுரை வர உள்ளதாக சில தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்திக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 10,11 ஆகிய இருதினங்கள் சீன அதிபர், பிரதமர் மோடி ஆகிய மாமல்லபுரம் வருகை தந்து, அங்குள்ள சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் சந்தித்து கண்டுகளித்தனர்.
இந்நிலையில் ஜனவரி மாதம் மதுரை அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ரஷ்ய அதிபர் புடின் வர இருப்பதாக சில தனியார் தொலைக்காட்சிகள் பிரேக்கிங் செய்தியாக வெளியிட்டன.
இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஊடகங்களில் வெளியான தகவல் தவறானவை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.