சென்னை,அக்.30:  பயன்பாட்டில் இல்லாத போர்வெல்களை தமிழகம் முழுவதும் மழை நீர் கிணராக மாற்றும் முயற்சியில் அதிமுக தகவல்தொழில் நுட்ப துறை ஈடுபட்டுள்ளது.

2 வயது குழந்தை சுஜித் மணப்பாறை நடுகாட்டுப்பட்டியில் போர்வெல் குழியில் கடந்த 25-ம் தேதி விழந்து, குழந்தையை உயிருடன் மீட்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை 5 நாட்களாக மேற்கொண்ட நிலையில், மீட்பு பணிகள் பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டன். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர் வரும் காலத்தில் போர்வல் குழிகளால் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற வண்ணம், உடனடியாக பயன்பாட்டில் இல்லாத போர்வெல் குழிகளை மூட போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளில் மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் அறிவிப்பின் அடிப்படையில் அதிமுக தகவல்தொழில் நுட்ப பிரிவு சார்பில் புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லேட் செய்து. பயன்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அந்த இடத்தில் இருந்து செயலியின் மூலம் வலதுபுறம் கீழே உள்ள பச்சை பட்டனை அழுத்தினால், அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் பயன்பெறாத ஆழ்துறை கிணற்றை மழை நீர் சேகரிப்பு கிணறாக மாற்றி தரப்படும் என தெரிவித்துள்ளது.