இஸ்லாமாபாத், அக்.31: பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 67 பேர் பலியாகி உள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது. ரஹீம் யார் கான் நகருக்கு அருகே ரெயில் சென்று கொண்டு இருந்த போது மூன்று பெட்டிகள் தீ விபத்துக்குள்ளாக்கியது.

காலை உணவு சமைக்க ஒரு எரிவாயு சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்தது. இதில் பெட்டி முழுவதும் தீ பரவியது. இதனால் அலறி அடித்து ஓடிய பயணிகள் சிலர் தீப்பிழம்புகளில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து உள்ளனர். இந்த விபத்தில் மொத்தம் 67 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.