பட்டாசு பட்டு இளம்பெண்ணுக்கு கண்பாதிப்பு

சென்னை

சென்னை, அக்.31: அரும்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஹரிகரன் மனைவி கலைவாணி (வயது 28). இவர், தீபாவளியன்று இரவு 8 மணியளவில் கடைக்கு செல்வதற்காக அன்னை சத்யா நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த சில நபர்கள் பட்டாசை தூக்கிப்போட்டு வெடித்தபோது, அதில் ஒன்று கலைவாணியின் கண்ணில் பட்டு வெடித்துள்ளது.

இதனையடுத்து, வலியால் துடித்த கலைவாணி தனியார் கண் மருத்துவமனைக்கு நேற்று சென்று சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில், அவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.