சென்னை, அக். 31: கோவை மாவட்டம் பொன்னான்டம்பாளையத்தைச் சேர்ந்த கேசவராஜ் என்பவருக்கும், அவரது மாமன் மகளான கிருத்திகா என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும், கேசவராஜின் பெற்றோர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், தனிக்குடித்தனம் செல்ல சம்மதம் கேட்டுள்ளனர். ஆனால் புதிதாக கட்டிய வீட்டின் கடன் முடியும் வரை கூட்டுக்குடும்பமாக வாழலாம் என பெற்றோர்கள் தெரிவிக்கவே அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அந்த தம்பதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.