முதுகெலும்பு பாதித்தவருக்கு சிகிச்சை அளிக்கும் மையம்

சென்னை

சென்னை, அக்.31: சென்னையின் புகழ்பெற்ற முதுகெலும்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லூனர்களில் ஒருவரான டாக்டர். பாலமுரளி தலைமையில், முதுகெலும்பு மற்றும் நரம்பியல் கோளாறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் ஹம்ஸா மையம் துவங்கப்பட்டது. புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த மறுவாழ்வு மையத்தில் 20 படுக்கைகள் உள்ளன; இங்கு தண்டுவட பாதிப்புகள், மூளை பாதிப்புகள், பக்கவாதம், கழுத்து மற்றும் முதுகு வலி, செரிபிரல் பால்ஸி என்னும் பெருமூளை வாதம், மற்றும் பல நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ள வர்களுக்கு உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும்.

இருபது உள்நோயாளிகளுக்கான படுக்கைகளைக் கொண்ட ஹம்ஸாமையம், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் தினசரி பராமரிப்பு சேவைகளை வழங்கும். சென்னையில் முதல் முதலில் இம்மாதிரியான சேவைகளை பிரத்தியேகமாகவும் முழுமையாகவும் ஹம்ஸா மையம் வழங்குகிறது. மறுவாழ்வு சேவைகளோடு சேர்த்து கூடுதலாக பேச்சு மற்றும் முழுங்கும் சிகிச்சை,தொழில்சார் சிகிச்சை,சக ஆலோசகர், சமூக சேவகர், அறிவாற்றல் சிகிச்சை மற்றும் மனநல மருத்துவமும் வழங்கப்படுகிறது.

துவக்க விழாவில் பேசிய ஹம்ஸா மையத்தின் மேலான் இயக்குனரான டாக்டர். பாலமுரளி, கூறுகையில், சென்னையில் முதுகெலும்பு மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கென ஒரு முழுமையான மறுவாழ்வு மையம் இல்லை. சென்னையின் வளர்ந்து வரும் மக்கள் தொகையால், மறுவாழ்வுசிகிச்சைகளுக்கான தேவைகளும் அதிகரித்து வருகிறது. அதாவதுமூளை, முதுகெலும்பு, எலும்பியல், குழந்தை மருத்துவம், முதியவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின்னான பராமரிப்பு மையங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில், மருத்துவ சேவையில், ஹம்ஸா ஒரு புதிய அத்தியாயமாக துவங்கியுள்ளது. என்றார்.