புதுடெல்லி, நவ.1: புதுடெல்லி சர்வதேச விமான நிலையமான இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆர்டிஎக்ஸ வெடிமருந்து அடங்கிய ஒரு மர்ம பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 1 மணியளவில், டெர்மினல் -3 வரவேற்பு பகுதியில், கருப்பு நிற டிராலி பை ஒன்று மர்மமான முறையில் கிடப்பதை சிஐஎஸ்எப் கான்ஸ்டபிள், வி.கே. சிங், பார்த்துள்ளார். பின்னர் உடனடியாக அவர் தனது பொறுப்பாளருக்கும் மற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவலை தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பைக்குள் சந்தேகத்துக்குரிய பொருள் இருப்பதை கண்டறிந்தனர். சோதனை நாய் உதவியுடன் பையை சோதித்ததில், இது வெடிக்கக்கூடிய பொருள் இருப்பதாக தெரிந்தது. உடனடியாக, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை வரவழைக்கப்பட்டு, அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. வாகனங்கள் மற்றும் பயணிகளின் நடமாட்டம் நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். அந்த பையை ஸ்கேன் செய்த போது வெடிமருந்து இருப்பதற்கான சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த மர்ம பையை அதிகாலை 2.55 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள குளிரூட்டும் குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு, வெடிகுண்டு நிபுணர்கள் விமானநிலையத்தில் திவிர சோதனை மேற்கொண்டார்கள்.அதன் பின் அதிகாலை 3.30 மணிக்கு விமான சேவை துவங்கியது.