சென்னை, ஏப்.12:சேலத்தில் இன்று ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர். இதையொட்டி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 18-ந் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும், 18 சட்ட மன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத் தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தமிழகத்தில் 4 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். கர்நாடகத்திலிருந்து கிருஷ்ண கிரிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தரும் ராகுல் காந்தி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இதில் சேலத்தில் சீலநாயக்கன் பட்டி-ஆத்தூர் புறவழிச்சாலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ராகுலுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார்.