சென்னை, நவ.1: சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். விழாவில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2 தொகுதி இடைத்தேர்தலில் தோற்றாலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் கூறினார். ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்க் கட்சி சுட்டிக்காட்டுவது தான் ஜனநாயக முறை எனக்குறிப்பிட்ட ஸ்டாலின், இதைச் செய்தால் முதலமைச்சருக்கு கோபம் வருகிறது என சாடினார்.