கர்நாடகாவிலிருந்து மீனவர்கள் திரும்பி வர நடவடிக்கை

சென்னை

சென்னை, நவ. 1; கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலூக்குமீன் பிடிக்க சென்று சூறைக்காற்றில் திசைமாறி கர்நாடாக மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ள 500தமிழ மீனவர்கள்திரும்பி எச். வசந்த குமார் எம்பி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மகாராஷ்டிரா மாநில ஆழ்கடல் பகுதியில் 40க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது புயல் காரணமாக சூறைக்காற்றில் படகை செலுத்த முடியாமல் உத்தர கர்நாடக மாநிலத்தில் உள்ள கருவார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் கருவார் மீன்பிடி துறைமுக இயக்குனரையும், தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனரையும் தெ2£டர்பு கொண்டு அங்கு உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னதுறையை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், 40க்கும் மேற்பட்ட படகுகளை நிலைநிறுத்தவும், படகுகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகள் செய்து தரவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர சொல்லி கேட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.