பெய்ஜிங், நவ.2: இணைய தொழில் நுட்பத்தில் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இணைய தொழில் நுட்பத்தில் தற்போது பல நாடுகளில் 4 ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உள்ள 5 ஜி சேவையை அளிக்க சீனா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த 5 ஜி சேவையில் இணைய வேகம் 4 ஜி சேவையை விட 20 முதல் 100 மடங்கு வரை அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் புதிய 5 ஜி மொபைலை வெளியிட்டது. அமெரிக்கா தனது 5ஜி மொபைல் சேவையை அடுத்த சில வாரங்களில் வெளியிட்டது.