சென்னை, நவ.2: 14 வயதிற்குட்பட்டவருக்கான உலக சதுரங்கப் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்ற வேலாம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ரக்ஷிதா ரவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வேலம்மாள் கல்வி நிறுவனம் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரியும் சர்வதேச சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ரக்ஷிதா ரவி சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார்.
வெற்றிப்பெற்ற மாணவிக்கு, மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் 5000 மேற்பட்ட மாணவர்கள் உலக சதுரங்கப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ரக்ஷிதா தவி உருவம் பொறித்த பேட்ஜ் அணிந்து வரவேற்றனர். மேலும் முப்பரிமாண வடிவத்தில் வெற்றி மங்கையின் உருவப்படம் நிறுவப்பட்டு அவை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும்வெற்றி மங்கை ரக்ஷிதா ரவி கலந்துரையாடல் மாணவர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், சர்வதேச சாதனைகளைப் படைப்பதற்கு உற்சாகப்படுத்தும் வகையிலும் அமைந்தது.