திருச்சி, நவ. 2: திருச்சி விமான நிலையத்தில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்து கடத்தி வந்த 3பேரை கைதுசெய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர்ஏசியா விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளையும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனார். அப்போது இந்திய கடவுச்சீட்டு மூலம் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த தண்டாயுதபாணி என்ற விமான பயணியின் உடமைக்குள் 24 காரட் தரமுடைய 4 வளையல்கள், 2 சங்கிலிகள் 301 கிராம் எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 48 ஆயிரத்து 326 ஆகும்.

இதேபோல, மலேசிய கடவுச்சீட்டுடன் வந்திருந்த மலேசிய நாட்டின் பூச்சங் நகரைச் சேர்ந்த நரேந்திர கண்ணா, முனியாண்டி என்பவரிடமிருந்து 242 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 22 காரட் தரமுடைய 2 மோதிரம், ஒரு வளையல் 24 காரட் தரமுடைய 3 சங்கிலிகள் அவை. இதன் மதிப்பு, ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்து 879 ஆகும். இதுகுறித்து கைது செய்யப்பட்ட மூன்று பயணிகளிடம் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.