காற்று மாசு பாதிப்பில்லாத நகரங்கள் கோவை, சேலம், மேட்டூர், கடலூர்

இந்தியா

புதுடெல்லி, நவ.4: இந்தியாவில் காற்று மாசு படாமல் மக்கள் வாழக்கூடிய தகுதியான நகரங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் தமிழகத்தில் கோவை, சேலம், மேட்டுர், கடலூர் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்சினை நாளுக்கு நான் மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் க்ரீன்பீஸின் இந்திய நகரங்களில் காற்றின் தரம் குறித்த இரண்டாவது ஆண்டு அறிக்கை, நாடு முழுவதும் 280 நகரங்களிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்தது, 2017-இல் பகுப்பாய்வு செய்யப்பட்ட 168 நகரங்களுடன் ஒப்பிட்டுள்ளது. ஒப்பிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த பட்டியலில் தமிழகத்தின் இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

ஒரு கன மீட்டருக்கு 20 மைக்ரோகிராம்களுக்கும் குறைவான பிஎம்10 மாசுபாட்டிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் மதிப்பை எந்த இந்திய நகரமும் கடக்கவில்லை. 280 நகரங்களில் 52 மட்டுமே இந்திய அரசாங்கத்தின் காற்று மாசுபாட்டின் தரத்தை கடந்து செல்கின்றன, அவை பிஎம்10 ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் தாண்டக்கூடாது என்று கூறுகின்றன. ஆபத்தான காற்று மாசுபாடு இல்லாமல் வாழக்கூடிய 52 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த கோவை, சேலம், மேட்டூர், கடலூர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரி, காரைக்கால், கேரளாவில் உள்ள திருச்சூர், பத்தனம்திட்டா, கொச்சி, திருவனந்தபுரம், கர்நாடகாவின் மைசூர் ஆகிய நகரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.