சைக்கிளில் அலுவலகம் சென்ற துணை முதல்வர்

இந்தியா

புதுடெல்லி, நவ.4: டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தில் உள்ள நிலையில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்றது அனைவராலும் பாராட்டப்பட்டது. டெல்லியில் காற்று மாசு அபாயகட்டத்தை தாண்டி உள்ளது. காற்று மாசை குறைக்க ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் கொண்ட வாகனங்கள் பயன்படுத்தும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, இன்று இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்தலாம். எனினும், விதிகளை மீறி வாகனம் ஓட்டிய நபர்களுக்கு காவல் துறை அபராதம் விதித்தது. இந்த திட்டத்தில் டெல்லி முதல் மந்திரிக்கு விதிவிலக்கு இல்லை. இதனால் அவர், இரட்டை இலக்க எண் கொண்ட வாகனத்தில் புறப்பட்டு சென்றார். இதேபோன்று டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.