ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

இந்தியா

சண்டிகர், நவ.4: அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கர்னால் மாவட்டம் ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் நேற்று மாலை தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள். இதுகுறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

50 அடி ஆழம் உள்ள அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் எந்திரத்தால் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டப்பட்டு, சிறுமியை மீட்கும் பணிகள் நடைபெற்றன. பத்து மணி நேரத்தில் மீட்கப்பட்டாலும் சிறுமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.