காத்மண்டு, நவ.4: நேபாளத்தில் ஆறு ஒன்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. சிந்துபால் சவுக் என்ற நகரில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சன்கோஷி என்ற ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகியதாக கூறப்படுகிறது. மேலும் இரு குழந்தைகள் மற்றும் 8 பெண்கள் உள்பட 50 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காயங்களுடன் ஆறு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த மேலும் மூன்று பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.