திருச்சி, நவ.4: அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக காவிரி நதியின் புனிதம் காப்பதன் அவசியத்தை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 8 ஆண்டுகளாக அன்னை காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. நிகழாண்டில் 9 ஆவது ஆண்டாக21ம்தேதி கர் நாடக மாநிலம், குடகு மாவட்டம், தலைக்காவிரியில் ரத யாத்திரை தொடங்கியது. கடந்த 25 ஆம் தேதி தமிழக எல்லையான ஒகேனக்கலுக்கு யாத்திரை வந்ததைத் தொடர்ந்து ஸ்ரீ அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தில் தமிழக ரதயாத்திரை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு புனித நீராடல் படித் துறைகளில் காவிரித் தாய்க்கு அபிஷேக ஆராதனை, மகா ஆரத்தி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிப் படித் துறையில் நடைபெற்ற நிகழ்வுக்கு அகில பாரதிய சந்நியாசிகள் சங்க பொதுச் செயலாளர் சுவாமி ராமானந்தா, சொக்கபுர் ஆதினகாத்தார் ஸ்ரீலஸ்ரீ தண்டபாணி தேசிகா பண்டர் சன்னதி ஆகியோர் தலைமையில் காவிரித் தாய்க்குத் திருவிழா நடைபெற்றது. பாராயணம் பாடப்பட்டு காவிரித் தாய்க்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் பெண்கள் பங்கேற்று 108 தீபங்களை தட்டுகளில் வைத்து ஏந்திக் காவிரியில் விட்டனர். முன்னதாக சிவசேனா கட்சி மாநிலச் செயலாளர் ஆ. அருள்வேலன் தலைமையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கே.கே. மகேஷ்வரன், எஸ். தியாகராஜன், அன்பழகன் , நதிநீர் பாதுகாப்பு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.