பெங்களூரு சிறையில் சசிகலாவின் புதிய புகைப்படம்?

இந்தியா

பெங்களூரு, நவ.4: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா. இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சுடிதார் உடை அணிந்து, அவர் நின்று கொண்டிருப்பது போல உள்ள அந்த புகைப்படம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்து விட்டனர். இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா ஷாப்பிங் சென்று வந்ததாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சிறை விதிகளை அவர் மீறியது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலாவின் புதிய புகைப்படம் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.