சென்னை, நவ.4: தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள கடைகளை பகலில் நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையடிக்கும் பலே திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின்ரோட்டில் உள்ள கடையின் பூட்டை உடைத்து திருடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு புகார் வந்தது.அந்த புகாரின் பேரில் அப்பகுதி இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனது பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் போலீசார் அவனை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் வேலூர் மாவட்டத்தைச்சேர்ந்த பூபதி (வயது 36) என்பதும் பூட்டிய கடையில் புகுந்து கொள்ளையடித்தவன் என்பதும் தெரியவந்தது.

வேலூர் மாவட்டத்தில் இவன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்உ ள்ளது என்றும் ஒரு வழக்கில் கைதாகி வெளியில் வந்த அவன் தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணையில் தங்கி லாரி ஷெட்டில் வேலை செய்ததாகவும் அப்போது பகல் நேரங்களில் எந் தெந்த கடைகளில் கொள்ளையடிக் கலாம் என நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பலே திருடனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.