மும்பை, நவ.4: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக டெல்லியில் அமித்ஷாவை தேவேந்திரா பட்னாவிஸ் சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று மாலை கவர்னரை சந்தித்த சிவசேனாவும் முடிவு செய்துள்ளது, இதனால¢மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனா முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2லு ஆண்டுகளுக்கு கேட்கிறது. அதேநேரம் அந்த பதவியை விட்டுக்கொடுக்க பாரதீய ஜனதாவும் தயாராக இல்லை. தற்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

தற்போது சிவசேனா கட்சி தங்களுக்கு 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் விரைவில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறி வருகிரது. இந்த நிலையில் இன்று மாலை சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் எம்பி கவர்னரை சந்திக்க உள்ளார். அப்போது அவர் பெரிய கட்சியான பிஜேபியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைக்க உள்ளார். அக்டோபர் 24 ம் தேதிக்கு பிறகு மராட்டியத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உடனான சிவசேனாவின் மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.

இது குறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:- எங்களுக்கு இடையில் கதவு என்று எதுவும் இல்லை. ஒரு முட்டுக்கட்டை உள்ளது, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பாஜக மிகப்பெரிய கட்சியாக இருப்பதால் முதலில் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூற வேண்டும். ஆனால் அது தோல்வியுற்றால், நாங்கள் உரிமை கோரலாம் என கூறினார். இந்நிலையில், இப்போதைய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். ஆட்சி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆலோசித்ததாக தெரிகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சோனியாவை சந்திப்பதற்காக டெல்லி விரைந்துள்ளார். அடுத்த 2 நாட்களில் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.