பெங்களுரு, நவ.4: கர்நாடகாவில் இருந்து இந்திய ராணுவத் திற்கு கல்லூரி மாணவி பீமக்க சவ்கானா தேர்வாகி உள்ளார். தேர்வில் பங்கேற்ற பெண்களில் இவர் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  தார்வார் மாவட்டம் மடிக்கோப்பா கிராமத்தை சேர்ந்தவர் பீமக்க சவ்கானா(வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என கனவு இருந்து வந்தது. இந்த நிலையில் வடகர்நாடகத்தைச் சேர்ந்த 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ராணுவத்தில் சேர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் சவ்கானா என்ற மாணவியும் தேர்வாகியுள்ளார்.